பாலத்தில் வந்த கார் திடீரென்று வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டிற்கும், கனடா நாட்டிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சி அருகே ரெயின்போ பாலம் உள்ளது. இதன் அருகே அமெரிக்கா - கனடா எல்லை சோதனை சாவடி இருக்கிறது. இங்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அங்கு வந்த கார் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. உடனே, இதனை பார்த்த அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, அந்த காரில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர்.
பாலத்தின் எல்லையில் வந்த வாகனம் ஒன்று வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோகுல் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நியூயார்க்கில் உள்ள அதிகாரிகள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.