Published on 15/05/2020 | Edited on 15/05/2020

கரோனா பாதிப்புகளைச் சரிசெய்யும் நோக்கிற்காக இந்தியாவுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.
கரோனா பாதிப்பு அவசரக்கால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்புகளுக்காக உலக வங்கி கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் (7,600 கோடி ரூபாய்) நிதியுதவியை அறிவித்தது. இதனையடுத்து தற்போது மேலும் ஒரு பில்லியன் டாலரை இந்தியாவுக்கு ஒதுக்கியுள்ளது. சமூகப் பாதுகாப்பு தொகுப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, இரண்டு தவணைகளாக இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு 750 மில்லியன் டாலரும், 2021 ஆம் ஆண்டுக்கு 250 மில்லியன் டாலருக்கு இந்தியாவுக்கு உலக வங்கி வழங்க உள்ளது. இந்த முதல்கட்ட நிதித்தொகுப்பு மூலம் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் நாடு முழுவதும் செயப்படுத்தப்பட உள்ளது.