Skip to main content

விண்டோஸ் 10-ல் இனி ஸ்டோரேஜ் பிரச்சனை இல்லை... வருகிறது அசத்தல் அப்டேட்ஸ்!!!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

windows 10

 

விண்டோஸ் 10-ல் ஸ்டோரேஜ் பிரச்சனையை சமாளிக்க புது அப்டேட்டை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இதற்கு ஆர்கைவ் ஆப்ஸ் (Archive apps) என்று பெயரிட்டுள்ளது. அதாவது நீண்ட நாட்களாக பயன்படுத்தாத செயலிகளை கணினியானது தானே கண்டுபிடித்து மறைத்து வைக்கும். இதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் இழப்பு ஏதும் ஏற்படாது எனவும் அறிவித்துள்ளது.

 

இந்த வசதியானது தேவைபட்டால் நம் கணினியில் ஆன் செய்துகொள்ளவும், தேவை இல்லை எனும் பட்சத்தில் இதை நிறுத்தி வைத்துக்கொள்ளும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இதைச் சோதனை முறைக்கு உட்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10-ல் புது இயங்குதளத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் இந்த வசதியானது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முடிவுக்கு வருகிறது விண்டோஸ்-7

Published on 04/01/2020 | Edited on 04/01/2020
w

 

உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள ’வின்டோஸ் 7’ எனப்படும் ஆபரேடிங் சிஸ்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. 

 

எதிர்காலத்தில் விண்டோஸ் -10 பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது.

 

Next Story

விண்டோஸ் 10, புதிய அப்டேட் போட்டால் எல்லாம் காலி...!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

 

 

ww

 

மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று வருடத்திற்கு நான்கு முறை விண்டோஸ் 10 தனது மென்பொருளை (OS)  அப்டேட் செய்ய தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்திவருகிறது. அதன் அடிப்படையில் 2018 அக்டோபர் மாதத்திற்கான நான்காவது காலாண்டு அப்டேட் செய்ய அறிவுறுத்தியது. இம்முறை அவ்வாறு செயும்போது வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தரவுகளை எல்லாம் இழக்க நேரிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றனர். அதனைத் தொடர்ந்து தற்போதைக்கு விண்டோஸ் 10 அப்டேட்டை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மேலும் அந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மூன்றாம் காலாண்டு மென்பொருளையே உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக வாடிக்கையாளர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களிலும் செல்ஃபோன்களிலும் ஆட்டோமேட்டிக் அப்டேட் வசதியை நிறுத்திவைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரேவேளை வாடிக்கையாளர்கள் ஏற்கனவே நான்காம் காலாண்டுக்கான அப்டேட் செய்திருந்தால் மீண்டும் அவர்கள் பழைய விண்டோஸ் 10 மூன்றாவது காலாண்டு மென்பொருளையே உபயோகிக்குமாறும் அதற்கு வாடிக்கையாளர்கள் செட்டிங்ஸ் -> அப்டேட் & செக்யூரிட்டி -> ரிக்கவரி சென்று அதில் உள்ள பழைய மென்பொருளை ஓகே செய்து அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.