Published on 28/05/2019 | Edited on 28/05/2019
நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிக இடம் பெற்ற பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.

டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினர் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியும் கோரியுள்ளார் மோடி.
வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் இலங்கை எம்.பி வாசுதேவ நாணயக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். "இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை பிரித்து, அதனை வைத்தே மோடி வரலாற்று வெற்றியினை பெற்றுவிட்டார்" என கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இலங்கை எம்.பி யின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.