Skip to main content

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது- இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 13/12/2018 | Edited on 13/12/2018

 

sri

 

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக ரணிலை பிரதமர் பதவியிலிருந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி சிறிசேனா  நீக்கினார். அதற்கு பதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.ஆனால் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 எம்.பிக்கள் மட்டுமே ஆதரவாக இருந்ததால் அவர் மீது ரணில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற முடியவில்லை. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஜனவரி 5ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அதிபர் சிறிசேனா அறிவித்தார்.


ஆனால், தேர்தல் நடத்தவும், ராஜபக்சே பிரதமராக செயல்படவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது.  ஐக்கிய தேசிய கட்சி எம்பி சாஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 117 பேர் ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். தமிழ் தேசிய கூட்டணி ரணிலுக்கு ஆதரவாக ஓட்டளித்தது.இதையடுத்து, ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கும்படி அதிபர் சிறிசேனாவை சாஜித் பிரமேதாசா வலியுறுத்தினார். ஆனால், தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ரணிலை பிரதமராக நியமிக்க சிறிசேனா மறுத்து விட்டார். இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்