உலக தலைவர்கள் பெரும்பாலும் மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள, முக்கிய அறிவிப்புகள் வெளியிட, பிரச்சார விளம்பரத்திற்காக என பல்வேறு காரணங்களுக்காக சமூகவலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அதில் அவர்களது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர்களை பின்தொடர்கின்றனர். அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் அதிகம் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் உலக அளவில் அதிகம் பின்தொடரப்படுபவராக இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரை 14.8 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். இந்த பட்டியலில் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 12.2 மில்லியன் பேரால் பின்தொடரப்படுகிறார். 10 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் போப் பிரான்சிஸ் நான்காமிடத்திலும், பிரிட்டன் அரச குடும்பம் எட்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.