உலகமே எதிர்நோக்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள நியூ ஹாம்ப்ஷையர் கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். அதேபோல் துணை அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ், குடியரசு கட்சி சார்பில் மைக் பென்ஸ் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப், ஜோ பைடன் உள்பட சுமார் 9.2 கோடி பேர் முன்னதாக வாக்களித்துள்ளனர். அமெரிக்காவில் தேர்தலின்போது முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி சுமார் 9.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.