Skip to main content

முகக்கவசம் அணியாத அதிபர்; இரண்டரை லட்சம் அபராதம் விதித்த நாடு!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
chile president

 

 

சிலி நாட்டின் அதிபராக இருப்பவர் செபாஸ்ட்டியன் பீன்யேரா. இவர், டிசம்பர் மாத தொடக்கத்தில் முகக்கவசம் இல்லாமல், ஒரு பெண்ணோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் பரவியது.

 

இதனைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு விதிகளை மீறி முக்கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்பு கோரிய அவர், தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் தனிமையில் நடந்து சென்றபோது அந்த பெண் தன்னிடம் வந்து ஒன்றாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறியதாக விளக்கம் அளித்தார்.

 

இருப்பினும் அதிபர் செபாஸ்ட்டியன் பீன்யேராவுக்கு, அந்நாட்டு அரசு 3500 டாலர் அபராதம் விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 2.57 லட்சம் ரூபாய் ஆகும்.

 


 

சார்ந்த செய்திகள்