இந்தியாவில் கரோனா பரவல் வேகமாகப் பரவி வருகிறது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், இந்திய பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன.
இந்தநிலையில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்தும் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்த நாடுகளிலும், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதேநேரத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் தூதரக அதிகாரிகள், அரசு குழுவினர், அமீரகத்தின் கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கும் வர்த்தகர்கள் ஆகியோர் நாட்டிற்குள் வர எந்தத் தடையுமில்லை என அறிவித்துள்ள அமீரகம், அவ்வாறு வருபவர்கள் பயணத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பும், அமீரகத்திற்கு வந்த பின்பும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.