Skip to main content

கீழிறங்கிய அதிபர் ட்ரம்ப்....

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
trump


பணக்கார அமெரிக்கர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் 259வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான இந்த பட்டியலில் 248வது இடத்தில் இருந்தார். 
 

இவர் அமெரிக்கா அதிபர் பதவிக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது, ட்ரம்ப்பின் முழு சொத்து மதிப்பு 4.5 பில்லியன், ஃபோர்ப்ஸ் பட்டியலில் 121வது இடத்தில் இருந்தார். அதிபரான அடுத்த வருடமே 138வது இடத்திற்கு கீழிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த வருடத்திற்கான அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிசோஸ்தான். இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார். 

சார்ந்த செய்திகள்