Published on 08/10/2020 | Edited on 08/10/2020
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும், அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில், "தனக்கு கரோனா வர வைத்துத் தடுப்பு மருந்தின் அவசியத்தைத் தெரியப்படுத்திய கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கரோனாவைப் பரப்பிய சீனா அதற்கான உரிய விலையைக் கொடுக்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.