Skip to main content

காபூலை கைப்பயற்றிய தாலிபான்கள்... ஆப்கானிஸ்தானில் பதற்றம்!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

afganisthan

 

ஆப்கானிஸ்தான்நாட்டில், தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறிவருகின்றனர். கடந்த 13.08.2021 அன்று மட்டும் அவர்கள், 4 மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் நாட்டிலுள்ள 34 மாகாண தலைநகரங்களில், பாதியைத் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது கடைசியாக ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தலைநகர் காபூலுக்குள் ஆயுதங்களுடன் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. காபூலின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நகருக்குள் தாலிபான்கள் நுழைந்து விட்டனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கந்தஹார், ஜலாலாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை பயங்கரவாதிகள் பிடித்திருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்