லண்டனில் தாடி இருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு 7 ஆயிரத்து 102 பவுண்டு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் நடத்திய நேர்காணலில் நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேதி என்பவர் கலந்துகொண்டார். அப்போது அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து ராமன் இது குறித்து லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஹோட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ தாடி வைத்திருக்ககூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே ஹோட்டல் நிர்வாகம் ராம் சேதிக்கு 7 ஆயிரத்து 102 பவுண்ட், அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.