
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா வட மாநிலங்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். அதிலும் குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில், இந்தாண்டின் நவராத்திரி விழா மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை என 9 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவை ஒட்டி, 9 நாள்களுக்கு அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாநகராட்சி மேயர் இது குறித்து பேசியதாவது, “காசியின் மத முக்கியத்துவம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, நவராத்திரி பண்டிகையின் போது அனைத்து மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும், கடைக்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நவராத்திரியின் போது, மாநகராட்சிப் பகுதியில் இறைச்சி மற்றும் இறைச்சி கடைகள் 9 நாட்களுக்கு மூடப்படும். நகராட்சியால் அதன் இணக்கம் உறுதி செய்யப்படுகிறது. மீறினால், அபராதம் மற்றும் எஃப்.ஐ.ஆர். நடவடிக்கை எடுக்கப்படலாம். முதலில், இந்த உத்தரவு குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்படுவதை அமைப்பு உறுதி செய்யும்” எனத் தெரிவித்தார்.