Published on 02/04/2019 | Edited on 02/04/2019
சவுதியை சேர்ந்த பத்திரிகையாளர் கசோகி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.
பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த கொலை வழக்கில் சவுதியிலிருந்து வந்த ஏஜெண்டுகள் 15 பேர் தான் கசோகியை கொன்றனர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கசோகியின் முதல் மனைவியின் வாரிசுகளான அவரது 2 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆகியோருக்கு சவுதி அரசு சார்பில் நீண்டகால அடிப்படையில் சொத்துகள் மற்றும் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. அதன்படி சவுதியின் ஜெட்டா நகரில் 4 பேருக்கும் வீடுகளும் மாதம் தோறும் 7 லட்சம் முதல் அவர்கள் கேட்கும் தொகையை தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் 27 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.