ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
எஸ்டோனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, பின்லாந்து ஆகிய நாடுகள் ரஷ்யாவின் விமானங்கள் தங்கள் நாட்டின் வான் பரப்பில் பறக்க தடை விதித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவும் தடைவிதித்துள்ளது. இன்று நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜோ பைடன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், உக்ரைனில் நடைபெறும் போரில் அமெரிக்கா பங்கேற்காது எனத் தெரிவித்தார்.