போரை நிறுத்த வேண்டுமென்ற சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். தீப்பற்றிய கட்டிடங்களில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ரஷ்யா இன அழிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் அரசு நாடியது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம், "உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.
இதனை நிராகரித்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.