பல்வேறு நாடுகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி அகதிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அகதிகள் அனுமதியில்லாமல் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தால் நாடுகடத்தப்படுவர் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் சான் பெட்ரா நகரத்திலிருந்து 4000 கிலோமீட்டர் தொலைவு நடந்தே 7500 பேர் அகதிகளாக அமெரிக்கா வந்துள்ளனர். அதில் 7 வயது சிறுமியும், அவரது தந்தையும் தடையை மீறி அமெரிக்க எல்லைக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதனால் எல்லை பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் காவலில் இருந்த பொழுது அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென சில ஜனநாயக கட்சியினர் கூறியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் வெளிநாட்டு செயலர் ஹிலரி கிளிண்டன் உள்பட பலரும் எல்லையில் நிலவும் மனிதநேய நெருக்கடியின் ஒரு பகுதி இதுவென கூறியுள்ளனர்.