Published on 05/06/2020 | Edited on 05/06/2020
காட்டு விலங்குகள் இரைகளை வேட்டையாடும் வீடியோக்கள் அரிதாக வெளியாகி புதிதாக பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான அதிர்ச்சியை கொடுக்கும். பெரும்பாலும் சிங்கம் முதல் முதலை வரை, மான்களை அதிகம் வேட்டையாடும். காடுகளில் பெரும்பாலும் மான்கள்தான் வேட்டையாடப்படும் உயிரினமாக இன்றைய வரையில் இருந்து வருகின்றது.
เหตุเกิดเมื่อวานนี้ ณ สวนสัตว์เปิดเขาเขียว pic.twitter.com/btHDDlDkXh
— Visit Arsaithamkul (@papakrab) May 30, 2020
நீர் நிலைகளுக்கு சென்று தண்ணீர் அருந்தும்போது முதலைகள் அதனை தாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில் மலைப்பாம்பிடம் மான் ஒன்று சிக்கிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மானை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடாமல் இருந்த மலைப்பாம்பை ஒருவர் இலை தழையால் அடிக்கவே, அது மானை விட்டுவிட்டு புதரில் ஓடி மறைந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.