
ஜெரூசலேம் தான் தங்களின் தலைநகரம் என கூறி இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. 1948ல் நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் நகரைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த இஸ்ரேல் அதனைத் தனது பகுதியாக அறிவித்துக் கொண்டது. ஆனால், இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசேலத்தை அங்கீகரிக்கிறோம் என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரான்ஸ், ஜெர்மனி, அரபு நாடுகள், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் இன்று இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் நகரை அங்கீகரித்துள்ளது ஆஸ்திரேலியா.
இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிஸன் கான்பெரேவாலி் நிருபர்களிடம் இன்று கூறுகையில், 'இஸ்ரேல் நாட்டின் தலைகராக மேற்கு ஜெருசேலத்தை நாங்கள் அங்கீகரிப்போம். இதில் மாற்றமில்லை . இப்போதுள்ள நிலையில், ஆஸ்திரேலியத் தூதரகம் தலைநகர் டெல் அவைவ் நகரிலேயே இருக்கும், பின்னர் மாற்றியமைக்கப்படும். எங்களின் வெளிநாட்டுக் கொள்கை எங்களின் குணத்தையும், நாட்டின் மதிப்புகளையும் பேசுவதாக இருக்க வேண்டும். நாங்கள் எதன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அதை நாங்கள் பாதுகாப்போம் என அவர் தெரிவித்தார்.