Skip to main content

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! - சுனாமி தாக்கும் என தகவல்!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! - சுனாமி தாக்கும் என தகவல்!

மெக்சிகோவின் தெற்கு பசுபிக் கடற்கரைப் பகுதிகளில் 8.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சுனாமி தாக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



மெக்சிகோ நாட்டின் தெற்கு பசுபிக் கடற்கரை பகுதியில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிலநடுக்க ஆய்வகத்தின் கருத்துப்படி நிலநடுக்கத்தின் அளவு 8.1 என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு ஆயிரம் உயிர்களை பலிகொண்ட நிலநடுக்கத்திற்கு பின், மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயிர்சேதங்கள் பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பல இடங்களில் கட்டிடங்கள் ஆட்டம் கண்டதால் பொதுமக்கள் சாலைகளில் கூடி நிற்கின்றனர். ஹெலிகாப்டர் மூலம் சோதனைப் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்திற்குப் பின் சக்திவாய்ந்த சுனாமி பேரலைகள் கடற்கரைப் பகுதிகளை சேதப்படுத்தும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்