Published on 28/01/2020 | Edited on 29/01/2020
பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் உள்ள ஹிராட் நகரில் இருந்து காபூல் நோக்கி விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. வானிலை சரியில்லாத காரணத்தால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் 5 மணி நேரம் காத்திருந்து அந்த விமானம் புறப்பட்டது.
இதற்கிடையே விமானம் அந்நாட்டின் டெக்யாக் பகுதியை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக தரையில் மோதி சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. விமானம் தரையில் மோதியது தீப்பிடித்ததால் பயணிகள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் தங்களுக்கு சொந்தமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.