பிலிப்பைன்ஸ் நாட்டின் சூலுவில் 92 ராணுவ வீரர்களுடன் பயணித்த விமானப்படைக்கு சொந்தமான சி- 130 விமானம், ஜோலோ தீவுகளில் தரையிறங்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 45 ராணுவ வீரர்கள் பரிதமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். படுகாயமடைந்த விமானிகள் உட்பட 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விமான விபத்து குறித்து பிலிப்பைன்ஸ் விமானப் படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதில், ராணுவ வீரர்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போது விமானம் விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானிகளிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளன. இதன் பிறகு விபத்துக்கான முழு விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழந்த ராணுவ வீரர்களில் பெரும்பாலானோர் பயிற்சியை முடித்து சில மாதங்களுக்கு முன்பு தான் ராணுவத்தில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.