அமெரிக்கா மெக்ஸிகோ எல்லை பகுதியில் சுவர் கட்டுவதற்காக நிதி தேவைப்பட்டதால் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய 10,000 கோடி ரூபாயை அமெரிக்கா எல்லை சுவருக்கு ஒதுக்குவதாக அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து பேசிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், "பாகிஸ்தானுக்கான நிதியை எப்படி ஏற்பாடு செய்வது என தெரியும்" என தெரிவித்திருந்தார்.
பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் அரபிக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காகவும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பல ஆண்டுகளாக முயன்று பார்த்ததில் எதிர்பார்த்ததைப் போல் தோண்டிய இடங்களில் எங்கேயும் எரிவாயுவும் இல்லை, கச்சா எண்ணெய்க்கான வாய்ப்பும் இல்லை என்று தெரியவந்ததாக பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக தெரிவித்துள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்பில் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வு பாகிஸ்தானின் பொருளாதாரத்தையே மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முடிவு பாகிஸ்தானியர்கள் இடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பொருளாதார முன்னேற்றத்திற்காக தற்போது புதிய வழிகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.