Published on 03/04/2019 | Edited on 03/04/2019
தீவிரவாதத்திற்கு துணை புரிந்ததாக பாகிஸ்தான் மீது சர்வதேச நிதி அமித் பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு உதவும் வகையில் அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அண்மையில் சர்வதேச நிதி அமைப்பு இது குறித்து பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 8,707 சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க சர்வதேச நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.