பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் கட்டப்பட்ட 500 ஆண்டு பழைமையான கோட்டை போன்ற சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளார்கள். பெல்ஜியத்தில் உள்ள செயிண்ட் பாவே தேவாலயத்தின் பின்புறம் இந்த சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கல்லறைகள் இருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறினாலும், கோட்டை வடிவத்தில் எலும்புகள் இருப்பதால் அதனை ஆராய்ச்சியாளர்கள் மறுத்துள்ளார்கள்.
இந்த சுவர் திட்டமிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக எலும்புகளால் கட்டப்பட்டுள்ளது என்றும், அருகில் இருந்த கல்லறைகளில் இருந்து இதற்கான எலும்புகள் கொண்டுவரப்பட்டு இது கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், மிகவும் திட்டமிட்டு இதை கட்டியிருப்பதால் மனித உழைப்பு இதில் அதிகம் செலவிடப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். இத்தனை எலும்புகளை ஒரே இடத்தில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.