இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல தகுதியானவர் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் கூறியுள்ளார்.
நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியான நபர். நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன். அவர் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இரு நாடுகளுக்கு இடையேயான போரினை நிறுத்தி அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவராக உள்ளார்.
உலகநாடுகள் இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மோடி செயல்படுத்தும் கொள்கைகளால் இந்தியா செழிப்பான மற்றும் பலமான நாடாக மாறிவருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அமைதியை மேம்படுத்துவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் கணிசமான பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் கொடுக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே, நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவராக உள்ள டோஜேவின் கருத்து கவனிக்கத்தக்கதாக உள்ளது.