Skip to main content

கஞ்சா புகைக்க மாதம் இத்தனை லட்சம் சம்பளமா?

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இதழ் நிறுவனமான அமெரிக்கன் மரிஜுயனா, கஞ்சாவின் மருத்துவ குணங்களை ஆராய்ச்சி செய்து கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது.
 

smoke

 

 

இந்நிலையில், இந்நிறுவனம் கஞ்சா புகைப்பவர்களை பணியமர்த்தி வருகிறது. இதற்காக ஆன்லைனில் விளம்பரங்களும் செய்து வருகிறது.

இந்த வேலைக்காக மாதம் 3000 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்குகிறதாம். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்திற்கு மேல் ஆகும். ஒவ்வொரு மாதமும் விதவிதமான கஞ்சா ரகங்களை சுவைத்து விமர்சிக்க வேண்டும். இதுதான் பணி. பணிக்குச் சேர விரும்புவோர் தங்களது இருப்பிடத்தில் கஞ்சா சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. 

இந்தப் பணி குறித்த விவரங்கள் அனைத்துமே உண்மையானது. இதுவரையில் இந்தப் பதவிக்காக 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று இதழின் முதன்மை ஆசிரியர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தையின் மரணம்... நியூயார்க் போலீஸில் சாதித்துக் காட்டிய இந்திய வம்சாவளி பெண்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

new york police pratima bhullar maldonado oppited captain 

 

நியூயார்க் காவல்துறையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த பிரதிமா புல்லர் மால்டோனாடோ என்பவர் தனது ஒன்பது வயது வரையில் இந்தியாவில் வளர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு தான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார். டாக்சி டிரைவராக இருந்த இவரது தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டு காலமான நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நியூயார்க் காவல்துறையில் காவலராக இணைந்த பிரதிமா அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் உள்ள சவுத் ரிச்மண்ட் ஹில்லில் என்ற இடத்தில் 102வது போலீஸ் வளாகத்தை நடத்தி வருகிறார்.

 

மேலும் தனது கடின உழைப்பால் காவல் துறையில் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற பிரதிமாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் காவல்துறையில் கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெற்ற இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையுடன், நியூயார்க் காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை பெறும் தெற்காசிய பெண் என்ற பெருமையையும் பிரதிமா பெற்றுள்ளார். பிரதிமாவிற்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதிமாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

லிப் ஃபில்லரால் நேர்ந்த அவலம்; ஓவர்டோஸ் உதட்டுக்கும் ஆகாது

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

 

நவீன உலகில் முக அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை சீரமைப்பது என பல்வேறு முறைகள் வந்துவிட்ட போதிலும் எதுவுமே அளவிற்கு அதிகமானால் தீமை என அடிக்கடி மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. குறிப்பாக மாடலிங் துறையைச் சேர்ந்த அழகிகள் மற்றும் நடிகைகள் தங்களை அழகாகக் காட்டிக்கொள்ள இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி ஒரு சிகிச்சை முறையால் மாடலிங் அழகி ஒருவர் அலங்கோலமாகியுள்ளது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Lip fillers suffer from lip fillers; an overdose does not happen to the lips either

 

லிப் ஃபில்லர் என்ற முறை ஒன்று அண்மையில் பிரபலமாகி வருகிறது. அதாவது உதடுகளை அழகாக எடுத்துக் காட்டுவதற்காக இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஊசி மூலம் சில குறிப்பிட்ட மருந்தை உதட்டில் செலுத்தினால் உதடுகள் அழகாக மாறுமாம். இந்த சிகிச்சையை பல்வேறு பிரபலங்களும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நியூயார்க்கை சேர்ந்த ஜெசிகா என்ற மாடல் அழகி ஒருவர் இந்த சிகிச்சையை எடுத்துள்ளார். ஒருமுறை இருமுறை அல்ல ஆறு முறை எடுத்துக் கொண்ட சிகிச்சை ஓவர்டோஸ் ஆகி உதடுகள் வீங்கி அலங்கோலமாக மாறியுள்ளார். சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அந்த நடிகை, ''கிளினிக்கில் இருந்த மருத்துவர் புதிய லிப் ஃபில்லர் வந்துள்ளது எனவும், இலவசமாக செலுத்தி விடுகிறேன் என்றும் கூறி சிகிச்சை மேற்கொண்டதால் தற்பொழுது என்னுடைய உதடுகள் இப்படி மாறிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.