எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக அதனை சுற்றியுள்ள 2000 பேர் வெளியிரேற்றப்பட்ட சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் நெக்ஸ்ட்லால்பன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் வழியாக எரிவாயு பைப்லைன் செல்கிறது. திடீரென இந்த குழாய்களில் பிளவு ஏற்பட்டு வாயு கசிய ஆரம்பித்துள்ளது. அதிலிருந்த வெளிப்பட்ட புகை அந்த கிராமம் முழுதையும் புகை மண்டலமாக மாற்றியது. குடியிருப்பு பகுதிகள், வயல்வெளிகள், அருகிலிருந்த நெடுஞ்சாலையிலும் வாயுக் கசிவு பரவியது.
நெடுஞ்சாலை மற்றும் ரயில்பாதைகளில் வாயுக் கசிவின் புகைமூட்டம் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அபாயகரமான இந்த வாயுக் கசிவினால் பாதிக்கப்படாமல் இருக்க, உள்ளூர் மக்கள் 2000 பேர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளால் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.