நியூ மெக்ஸிகோ நூலகத்தில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் இருக்கும் சிறிய நகரான க்ளோவிஸ்-ல் நூலகம் ஒன்று உள்ளது. நேற்று மாலை நூலக வளாகத்தில் நுழைந்த மர்மநபர் தனது துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.
திடீர் தாக்குதலால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.