உலகில் கரோனா பெருந்தொற்றை நன்றாக கையாண்ட சில நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், தற்போது கரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் ஜெர்மனியின் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரேநாளில் அந்தநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் கரோனா பரவ தொடங்கியதிலிருந்து அந்தநாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
இந்தநிலையில் அமெரிக்க ஊடகம், ஜெர்மனியில் கடந்த சில வாரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், இதில் பாதிப்பேர் வென்டிலேட்டர்களில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவ்வாறு வென்டிலேட்டர்களில் இருப்பவர்களில் யாருமே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.