ஈரோடு இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் பிரதானமாக போட்டியிடுகிறது. மற்றும் சுயேட்சைகளும் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் முடிவு பெற்று வேட்புமனு பரிசீலனையும் முடிவு பெற்ற நிலையில் தேர்தல் பரப்புரையானது ஈரோட்டு களத்தில் சூடு பிடித்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார் பரப்புரையை தொடங்கி இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது புதிய தேர்தல் அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த ஒருவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது சர்ச்சையானது. அதேபோல் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்த நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரியை மாற்றி நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.