இந்தியாவுடனான எல்லை பிரச்சனையை தொடர்ந்து இந்தியாவையும், மத்திய அரசையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி. அந்தவகையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ராமர் நேபாளத்தை சேர்ந்தவர் எனவும், அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் இந்தியாவில் ராமர் ஆதரவாளர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் நேபாள பிரதமருக்கு எதிராக இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சீனாவின் பேச்சை கேட்டுக்கொண்டு இந்த மாதிரியான கருத்துகளை நேபாளம் பொதுவெளியில் வைக்கின்றது என்றும் அவர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், "ராமர் பற்றி பிரதமர் ஒலி தெரிவித்துள்ள கருத்து தனிப்பட்ட கருத்து, அது அரசியல் ரீதியான கருத்து அல்ல, அயோத்தியின் மாண்பை குறைக்கும் நோக்கம் அவருக்கு இல்லை" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.