Published on 05/08/2020 | Edited on 05/08/2020

இங்கிலாந்து நாட்டின் அயின்ஸ்டேல் கடற்கரையில் அழுகிய நிலையில் ஒரு மிருகத்தின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. பார்ப்பதற்கே கொடூரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் அந்த மிருகத்தின் சடலம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அது மீன் இனத்தை சேர்ந்ததா அல்லது வேறு ஏதேனும் கடல் உயிரின வகையை சேர்ந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அழுகிய நிலையில் இருந்த சடலத்தில் இருந்து அதிக அளவில் துர்நாற்றம் வீசியதால் அதை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் 'இது மேமத் உயிரினமாக இருக்கும்' என்று ஒரு சாராரும், இல்லை 'இது திமிங்கலமாக இருக்கலாம்' என்று மற்றொரு சாரரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.