தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்க்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஷ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
இதன் பின்னர் கடந்த 2003ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த நவாப் ஷெரிப், முஷாரப் மீது தேச துரோக வழக்கை பதிவு செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த தூக்கு தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.