1600 ஆண்டுகளுக்கு முன் ரோமர்கள் பயன்படுத்திய பல வண்ண பளிங்கு கற்களை தளமாக பயன்படுத்தி இருப்பதை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலியில் உள்ள ஓஸ்டியா என்ற இடத்தில் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய மித்ரா கடவுளுக்கான கோவில் இருக்கிறது. இந்த கோயிலின் அடியில் உள்ள அறையில் ஆச்சரியமூட்டும் பல வண்ண பளிங்குக் கற்களால் ஆன தளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த அறையில் ஒளி மற்றும் சூரியனை குறிக்கும் மித்ரா என்ற கடவுளையும் மற்ற கடவுளரையும் ரோமர்கள் வணங்கியிருக்கிறார்கள்.
ஒரு பெஞ்ச், ஒரு பூத்தொட்டி ஒரு மேடை ஆகியவை இருக்கின்றன. இந்த அறையில் விருந்துகள், தொடக்க விழாக்கள், விலங்குகள் பலியிடல் ஆகியவை நடந்திருக்கின்றன என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.மித்ரா என்ற கடவுளை முதன்முதலில் பாரசீகர்கள்தான் வணங்கினார்கள். இந்தக் கடவுள் ஒளி மற்றும் சூரியனை அடையாளப்படுத்தினார். இவர் மிகச்சிறந்த வில்வீரர் என்றும் கவ்டெஸ், கவ்டோபேட்ஸ் என்ற இரண்டு விளக்குத் தூக்கும் ஆட்களோடு அவர் வேட்டைக்கு செல்வார் என்றும் பழங்கதைகள் கூறுகின்றன.