அமெரிக்காவில் கணிசமான அளவிலான வேலையாட்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய முடிவை எடுத்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் மென்பொருள் நிறுவனம் ஆகும். கரோனா தொற்றுப் பரவல் அதிகமானதும், பாதுகாப்பு நலன் கருதி பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதித்தனர். தற்போது பாதிப்பின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, பல நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நடைமுறையை கணிசமான அளவிலான பணியாளர்களுக்கு தொடர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கரோனா தொற்று வாழ்வதையும், வேலை பார்ப்பதையும் புதிய முறையில் மாற்றி யோசிக்க வைத்துள்ளது. அனைத்து பணியாளர்களையும் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவிடவில்லை. பணியாளர்கள் அலுவலகத்தில் ஒரு சேர அமர்ந்து வேலை செய்யும்போது கிடைக்கும் பலன்களையும் நாங்கள் நன்றாக அறிவோம்" எனக் கூறினார்.