Skip to main content

ரூ.16,999 மொபைல் ரூ.1, ரூ.29,999 டிவி ரூ.1- எம்ஐ தடாலடி ஆஃப்பர்...

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
mi


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் பல அதிரடி தள்ளூபடிகள் அறிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து எம்ஐ மொபைல் நிறுவனமும் தனது இணையதள பக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு பல அதிரடி தள்ளூபடிகளில் பொருட்களை விற்க அறிவிப்புகள் வெளியிட்டது. அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை குறிப்பிட்ட பொருட்களுக்கு எம்ஐ நிறுவனம் அதிரடியான இலவசங்களுடன், விலையும் மிக சொற்பமாக குறைத்து விற்கின்றது. இதுவரை ஒரு ரூபாயுக்கு போக்கோ மொபைல் வழங்கியது. சரியாக நான்கு மணிக்கு இந்த பொருட்களின் விற்பனை தொடங்கி அடுத்த நொடிக்குள் விற்பனை முடிந்துவிடுகிறது. அதேபோல இறுதிநாளா இன்று, நான்கு மணிக்கு எம்ஐ ஏ2 ஸ்மார்ட் மொபைலை ஒரு ரூபாயுக்கு விற்பனை செய்ய உள்ளது. 10 எம்ஐ ஏ2 மொபைலை மட்டுமே இந்த அதிரடி தள்ளூபடியில் விற்பனை செய்ய உள்ளது எம்ஐ நிறுவனம். மேலும் ஒரு ரூபாயுக்கு எம்ஐ நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி (49 இன்ச்) அப்போது ஆன்லைனில் விற்பனை செய்கிறது. எம் ஏ2 வின் வர்த்தக விலை ரூ.16,999, எம்ஐ 4ஏ டிவியின் வர்த்தக விலை ரூ.29,999.

 

சார்ந்த செய்திகள்

 
News Hub