Published on 21/01/2019 | Edited on 21/01/2019
மெக்சிகோவில் எரிவாயுக்குழாய் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளுக்கு எரிவாயு எடுத்துச்செல்லும் குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு அதனை தொடர்ந்து பெரும் சத்தத்துடன் குழாய் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளனர். அதில் குழந்தைகளும் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடைபெற்ற பகுதிகளில் மீட்பு பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக எரிவாயு குழாய்கள் செல்லும் வழித்தடங்கள் அருகிலுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.