Skip to main content

பனிக்கரடிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே ஆபத்து... எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

 This is a danger not only to polar bears but also to the world ... Analysts warn!

 

உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. ஆனால் மனிதனின் நவீன வாழ்வியல் முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் அதிகரித்து பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்படி கடல் மட்டம் உயர்வதால் பல நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. கடந்த மே மாதம் 20 ஆம் தேதி அண்டார்டிகாவில் 4,320 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட ஒரு பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியது ஆய்வில் தெரியவந்தது. ஒப்பீட்டு அளவில் புதுதில்லி நகரத்தைப் போன்ற மூன்று மடங்கு அளவு பெரிதான இந்தப் பாறைக்கு ஏ76 எனப் பெயரிடப்பட்டது. இந்த பனிப்பாறையானது 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. உலகமே கரோனாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் சூழலில் அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்து கடலில் மிதப்பது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 This is a danger not only to polar bears but also to the world ... Analysts warn!

 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா பருவநிலை மாற்றத்திற்கான குழுவில் புவியின் பருவநிலை மாற்றம் தொடர்பாக 234 விஞ்ஞானிகள் சமர்ப்பித்த மூன்றாயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையில் குறிப்பிடப்படும் அம்சமாக, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயரும். இதனால் மோசமான நிகழ்வுகளை மனிதகுலம் சந்திக்கும் என்றும், இயற்கை பேரிடர்கள் அதிகரிக்கும் என்றும், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசும் அனல் காற்று தற்பொழுது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீசுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவற்றின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறிப் போய்விடும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

 

 This is a danger not only to polar bears but also to the world ... Analysts warn!

 

இந்நிலையில் வெப்ப மயமாதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரும் வகையில் கிளாஸ்கோ பருவநிலை உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு முன் 4,000 கிலோ எடைகொண்ட பனிக்கட்டியை உருகவிட்டு இயற்கை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் உருகுவது பனிக்கரடிகளுக்கு மட்டும் பாதிப்பல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கே பாதிப்பு என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திறன் மிக்க வாக்காளராகுங்கள்” - கையேடு வெளியீடு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Become an Effective Voter  Handbook Release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான சத்யபிரதா சாகு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “திறன் மிக்க வாக்காளராகுங்கள்” என்ற வாக்காளர் கையேட்டினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.03.2024) வெளியிட்டார்.

இந்த கையேட்டில், “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“என்னை ஐபிஎஸ் அதிகாரியாக்க ஆசைப்பட்டாங்க” - விக்னேஷ் சிவன்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
vignesh shivan speech in awarness short film released

போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி ஆகியோர் உள்ளிட்ட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

ad

இந்த விழாவில் சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துக்களை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு விழிப்புணர்வு குறும்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஹெல்மட் அணியாமல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறித்தும் சிக்னல்களில் எல்லைக்கோட்டை மதிக்க வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தும் வகையிலும் ‘நீங்க ரோடு ராஜாவா?’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷாந்தனு, யோகி பாபு, அர்ச்சனா, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனைத்து குறும்படங்களையும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். 

விழாவில் விக்னேஷ் சிவன் பேசுகையில், “காவல் துறை முன்வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, எனக்கு இயக்க எப்போதுமே 100 சதவீதம் ஆர்வம் இருக்கும். அது போன்ற முன்னெடுப்பு எப்போதுமே நேர்மையாக இருக்கும். இந்த குறுப்படங்கள் மக்களுக்கு ஈஸியாக புரியுர மாதிரி எளிய முறையில் எடுத்துள்ளோம். வெளிநாடுகளில் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவார்கள். ஆனால் நம்ம ஊரில் கொஞ்சம் மெத்தனமாகவே பின்பற்றுவார்கள். எல்லாருக்குமே தனிப்பட்ட முறையில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது சரியாகும். நானும் போலீஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். என்னையுமே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டாங்க. ஆனால் நான் திரைப்பட இயக்குநர் ஆகிவிட்டேன். அப்படி ஆனாலும் கூட காவல்துறை சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிற போது ரொம்ப பெருமையாக சந்தோஷமாகவும் இருக்கும்” என்றார்.