சிங்கப்பூரை சேர்ந்த 59 வயது பே கியாவ் கியாங் 31 முறை தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்ததால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அதே போன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்த நிலைமையில் தண்டனை காலம் முடிந்து இவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் விடுதலையானவுடன் மது அருந்திய இவர் தொடர்ந்து 31 முறை காவல் துறைக்கு போன் செய்து தவறான தகவல்களை கூறியுள்ளார். மேலும் போதையில் தனது சகோதரி வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு அவர் சகோதரி கொடுத்த தகவலின்படி அவர் இருக்கும் இடத்திற்கு சென்று காவல்துறை அவரை கைது செய்ததது. 1996 லிருந்து சுமார் 10 முறை காவல்துறைக்கு வேண்டுமென்றே அழைத்த குற்றத்திற்காக இவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுப்பழக்கத்திற்கு அவர் அடிமையானதாகவும், அதனால் தான் அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.