Skip to main content

பாகிஸ்தானில் வெட்டுகிளிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் திணறல்!

Published on 04/02/2020 | Edited on 05/02/2020

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலைங்களை நாசம் செய்யும் சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சிந்து பகுதியில் ஆரம்பித்து வட கிழக்கில் கைபர் பகுதிவரை அந்நாட்டு விவசாயிகள் கோதுமை பயிரிட்டுள்ளார்கள். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கும் கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் வந்து சேதமடைய செய்கின்றன. இதனால் வவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள்.



வெட்டுக்கிளிகளின் தாக்கம் எப்போதும் இருக்கும் என்றாலும், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது அளவுக்கு அதிகமாக இருப்பதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். இதனால் கோடிகணக்கான விவசாய பயிர்கள் நாசமாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 50 கோடிக்கு அதிகமான கோதுமை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
 

 

சார்ந்த செய்திகள்