வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையேயான.சந்திப்பு அடுத்த மாதம் நிகழலாம் என வெள்ளை மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தலைவர்களின் சந்திப்பிற்கு முன்னர் இருநாட்டு தூதர்களும் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சுமூகமான முடிவுகளை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரியா அதிபர் கிம்முக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுபற்றி கிம் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'இரு நாட்டு நட்புக்கும் புதிய பாதை ஒன்று பிறந்துள்ளது. டிரம்ப் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இரு நாட்டு உறவுகளும் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். மேலும் டிரம்பின் கடிதம் எனக்கும் மிகுந்த மனநிறைவை தந்துள்ளது’ என கூறியுள்ளார். இந்த இரு தலைவர்களும் அடுத்த மாதம் சந்திப்பது உறுதியாகியுள்ள நிலையில் சந்திப்பு எங்கு நடைபெறும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.