ஜெசிந்தா ஆர்டன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அந்நாட்டின் பிரதமராகியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் 53 வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராக பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசு 2020 செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைபெற்ற தேர்தலிலும் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. மொத்த வாக்குகளின் சுமார் 50 சதவீத வாக்குகளை பெற்று, 1930 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்நாட்டு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற கட்சி என்ற சாதனையை தொழிலாளர் கட்சி இந்த தேர்தலில் பெற்றுள்ளது. இத்தேர்தலில் எதிர்க்கட்சியான நேஷனல் பார்ட்டி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து பேசியுள்ள ஜெசிந்தா ஆர்டன், "அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். நாம் கோவிட் நெருக்கடியிலிருந்து மீண்டு மீண்டும் சிறப்பாக மாறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.