இஸ்ரேல் நாட்டின் தாக்குதலில் பஹா அபு அல்-அட்டா கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகள் இடையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
பாலஸ்தீனின் காசா பகுதியில், இஸ்ரேலிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதியான பஹா அபு அல்-அட்டா மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாலஸ்தீனை சேர்ந்த சில அமைப்புகள் காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது தொடர் ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதில் 25 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, காசா பகுதி மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் காசாவில் 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்கிக்கொள்வதால் இருநாடுகளின் உறவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.