புத்தாண்டன்று பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது பெண் ஒருவரின் கையை தட்டிவிட்டதற்கு போப் பிரான்சிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை வாட்டிகன் நகரத்தின் மையத்தில் போப் பிரான்சிஸ் உள்ளூர் மக்களைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது. இதில் மக்களுடன் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார் போப். இந்த நிகழ்ச்சியில், கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண் திடீரென போப்பின் கைகளைப் பிடித்து இழுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத போப், அந்த பெண்ணின் கைகளை தட்டிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த செயலுக்கு போப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் பேசிய போப் பிரான்சிஸ், "சில நேரங்களில் நானும் பொறுமையை இழந்து விடுகிறேன். எனது செயலுக்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.