Skip to main content

அரசு கூறுவதைவிட இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம்..? விசாரணையில் வெளியான ஈரான் குறித்த தகவல்...

Published on 04/08/2020 | Edited on 04/08/2020

 

iran may seems triple times of demise rate than official figures

 

 

ஈரான் நாட்டில் அரசு கூறுவதைவிட மூன்று மடங்கு இறப்பு கரோனாவால் ஏற்பட்டிருக்கும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 1.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டில் அரசு கூறுவதைவிட மூன்று மடங்கு இறப்பு கரோனாவால் ஏற்பட்டிருக்கும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, கரோனா வைரஸ் பாதிப்பினால் ஜூலை 20 வரை 14,405 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், கரோனா அறிகுறிகளுடன் கிட்டத்தட்ட 42,000 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

 

ஆனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பிபிசி நடத்திய ஆய்வுகளின்படி, அரசாங்கம் கூறும் இறப்பு எண்ணிக்கையை விட மூன்று மடங்கு பேர் இறந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல மொத்த பாதிப்பின் எண்ணிக்கை அரசாங்க கணக்கைவிட இருமடங்கு அதிகம் இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த அகதிகளில் மட்டும் 1,916 வரை இறந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்