இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவிலிருந்து கிளம்பிய தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முந்தைய தினம் (09/01/2021) ஜாவா கடலில் விழுந்தது நொறுங்கியது. விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், ரேடாரில் இருந்தும் மறைந்ததாக இந்தோனேசியா அறிவித்தது.
ஸ்ரீவிஜயா நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில், விமானிகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த நாட்டின் கடலில் விமானத்தின் பாகங்கள் நேற்று (10/01/2021) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தற்போது அந்த விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை கடலில் அதிக ஆழத்தில் இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் அவை மீட்கப்படும் என்றும் அந்நாட்டு விமான போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.