3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் சுமார் 40 தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும், அதில் 30,000 முதல் 40,000 பேர் வரை இணைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த உண்மை தகவலை கடந்த 15 ஆண்டுகளாக எந்த பாகிஸ்தான் அரசும் அமெரிக்காவிடம் தெரிவிக்கவில்லை. தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க வேண்டும் என அமெரிக்கா பாகிஸ்தானிடம் வலியுறுத்தியபோது, பாகிஸ்தான் தம்மை தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது இருந்த தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் என்னை போன்ற பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியது" என குறிப்பிட்டார்.