Published on 10/11/2018 | Edited on 10/11/2018
![kuwait](http://image.nakkheeran.in/cdn/farfuture/oZN_29QK13TTi5LAXWejIc0ReARCiQCUL5rOpS_18gk/1541868582/sites/default/files/inline-images/kuwait.png)
குவைத், அரபு நாடுகளுள் ஒன்றான இந்த நாட்டிலுள்ள சாலைகள் வெள்ள நீர் புரண்டோடி கொண்டிருக்கிறது. குவைத்தில் வழக்கத்தைவிட அதிகமாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இந்த பெரும் வெள்ள சேதத்திற்கு பொருப்பேற்று அந்நாட்டின் பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல் ரோமி பதவி விலகியுள்ளார். இந்நிலையில் குவைத் அரசு, வீட்டை விட்டு யாரும் வெளியேற வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.